அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் 46ஆவது அதிபராக வெற்றி பெற்றுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டார். கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தேர்தல் வெற்றிக்குப் பிறகு முதல் முறையாக பொதுமக்கள் மத்தியில் கமலா ஹாரிஸ் உரையாற்றினார். அவர் பேசுகையில், செழுமையான நாட்டை உருவாக்க எங்களை வெற்றியடைய செய்ததற்கு நன்றி. நம்பிக்கை, ஒற்றுமை, கண்ணியம், அறிவியல் மட்டுமின்றி உண்மையையும் தேர்ந்தெடுத்து அனைத்தையும் தெளிவுப்படுத்திவிட்டீர்கள்.
கமலா ஹாரிஸ் வெற்றியை இனிப்புகள் வழங்கி கொண்டாடும் கிராம மக்கள் உலகம் முழுவதும் அமெரிக்காவின் தேர்தலை உற்றுநோக்கிக் கொண்டிருந்தபோது, உங்களது உணர்வுமிக்க வாக்குகளை ஜனநாயக கட்சிக்கு அளித்து அமெரிக்காவிற்கு புதிய விடியலை தந்துவிட்டீர்கள்” என்றார்.
கமலா ஹாரிஸ் வெற்றியை கொண்டாடும் துளசேந்திரபுரம் கிராம மக்கள் கமலா ஹாரிஸ் வெற்றியை பட்டாசு வெடித்து கொண்டாடும் மக்கள் கமலா ஹாரிஸின் வெற்றியை தங்களது வெற்றியாக கருதி அவரது பூர்வீகமான திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். அவரது வெற்றியை கொண்டாடும் வகையில் மக்கள் தங்கள் வீடுகளில் வண்ணக் கோலமிட்டும், கமலா ஹாரிஸின் குலதெய்வ கோயிலான தர்மசாஸ்தா கோயில் வாசலில் பட்டாசுகள் வெடித்தும் கிராம மக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.
இது குறித்து அந்த கிராம மக்கள் கூறுகையில், அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் பெற்ற வெற்றி தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும், தங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவர் வெற்றி பெற்றதை போன்று உணர்வதாக தெரிவித்தனர். வருங்காலத்தில் அவர் எங்கள் கிராமத்திற்கு வந்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
கமலா ஹாரிஸ் வெற்றி குறித்து பெருமை கொள்ளும் துளசேந்திரபுரம் கிராம மக்கள் இதையும் படிங்க:அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற கோயிலில் சிறப்பு வழிபாடு!