திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே எடமேலையூர் உள்ளிட்ட கிராமங்களிலுள்ள விவசாயிகள் குறுவையில் அறுவடை செய்த நெல்லை, நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்குக் கொண்டு செல்வதற்காக, நெல்மணியை சாலையில் கொட்டி வெயிலில் உலர்த்தும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
நாளொன்றுக்கு ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில், கொள்முதல் நிலையத்தில் 400 முதல் 700 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. இதன் காரணமாக, விவசாயிகள் கொண்டு வந்த நெல்லை வைப்பதற்கு போதுமான இடம் இல்லாததால், கடந்த 20 நாட்களாக சாலையில் கொட்டி வைத்து தார்ப்பாய் போட்டு மூடி வைத்துள்ளனர்.
இந்த நிலையில், பனியால் நெல்மணிகள் நனைந்து முளைக்கத் தொடங்கியுள்ளது. பனியில் நனைந்த நெல்மணிகள் மீண்டும் நாற்றாகிவருவதைக் கண்ட விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, "தற்போது நெல்லை கொள்முதல் நிலையத்திற்கு கொண்டுவந்து 20 நாட்களுக்கு மேலாகிவிட்டது.