தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தாலுக்கா அம்மன்பேட்டை சேர்ந்த சுரேஷ்குமார் (45). இவர், கரூரிலிருந்து லாரியில் ஜல்லி ஏற்றிக்கொண்டு வந்தபோது மேலவாசல் என்ற இடத்தில் லாரி கட்டுப்பாட்டை இழந்தது அன்பு (35 ) என்பவரின் உணவகத்துக்குள் புகுந்தது.
இதில் உணவகத்தில் இருந்தவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மன்னார்குடி காவல்துறையினர் விரைந்து வந்து லாரி டிரைவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.