திருவாரூர்: கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் காவிரி டெல்டா மாவட்டங்களில் நீர் நிலைகளைத் தூர்வாரும் பணிகளை சிட்டி யூனியன் வங்கி நிதியுதவியோடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த பணிகளை சிட்டி யூனியன் வங்கி மேலாண்மை இயக்குநர் காமகோடி தலைமையில் வங்கி நிர்வாக குழு இயக்குநர்கள் பாலசுப்ரமணியன், ஸ்ரீதர் ஐஏஎஸ் ஓய்வு, வங்கி அலுவலர்கள் வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோர் நேரில் சென்று இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
நேரில் ஆய்வு
மன்னார்குடி அருகே துளசேந்திரபுரம் கிராமத்தில் வடக்கு ஏரி தூர்வாரும் பணிகளை அவர்கள் பார்வையிட்டனர். எடை கீழையூர் , அன்னவாசல், கீழப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த காலத்தில் தூர்வாரப்பட்ட பணிகளில் தற்போதைய நிலை குறித்தும் ஆய்வு செய்தனர்.
வங்கி மேலாண்மை இயக்குனர் காமகோடி இதுகுறித்து பேசிய வங்கி மேலாண்மை இயக்குனர் காமகோடி, " காவிரி டெல்டா பகுதிகளில் நிலத்தடி நீரை மேம்படுத்தும் நோக்கில் நீர்நிலைகளை தூர்வாரும் பணிகளை வங்கியின் சமூக மேம்பாட்டு நிதியில் முன்னுரிமை கொடுத்து செயல்படுத்துகிறோம்" என்று கூறினார்.
இதையும் படிங்க: 5 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை