திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள தஞ்சை பெரிய கோயிலுக்கு நிகரான வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக திருக்கொட்டாரம் ஐராவதீஸ்வரர் திருக்கோயில் திகழ்ந்து வருகிறது.
இக்கோயில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு மகா சிவராத்திரியானது, வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. மேலும், 108 சிவ தலங்களில் ஒன்றாக திருக்கொட்டாரம் ஐராவதீஸ்வரர் ஆலயம் திகழ்கிறது.
திருஞானசம்பந்தரின் பாடல் பெற்ற திருத்தலமாகவும் மகரகபரிஷி எனும் முனிவர் வண்டு வடிவம் எடுத்து வந்து சிவனை தரிசித்து சென்றதாகவும், வெள்ளை யானையின் மீது ஏறி தேவேந்திரன் வந்து தரிசனம் செய்ததாகவும் புராண வரலாறுகள் உள்ளன.