திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்த ராணி(53) என்பவரது மகள் சுமதி(32). இவர் கடந்த மாதம் வீட்டு வேலைக்காக குவைத் நாட்டிற்கு சென்றுள்ளார். அவள் தாயாரிடம் தன்னை அடித்து துன்புறுத்துவதாக தொலைபேசியில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அவர் மாடியிலிருந்து தற்கொலைக்கு முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதனால் கை, கால் முறிந்து தற்போது சிகிச்சை மேற்கொண்டு வருகிறேன் என்றும் கூறியுள்ளார்.
குவைத்தில் தவிக்கும் மகளை மீட்டுத் தரக்கோரி ஆட்சியரிடம் தாய் மனு - குவைத்
திருவாரூர்: குவைத்தில் வேலை செய்யும் தன்னுடைய மகளின் கதி என்னவென்று தொியவில்லை. அவளை பத்திரமாக மீட்டுத் தருமாறு கண்ணீர் மல்க திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தார்.
இதனால் சுமதியின் தாயார் தனது மகளை அழைத்து வர உதவும் படி வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்த ஏஜெண்டு வினோதா என்பவரிடம் கேட்டபோது, அவர் சரியாக பதிலளிக்கவில்லை. மற்றொரு ஏஜெண்டான லட்சுமியிடம் கேட்டதற்கு ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால் மட்டுமே உன் மகளை மீட்டுத் தர முடியும் என்று மிரட்டியுள்ளார்.
மன உளைச்சலுக்கு உள்ளான தாயார் ராணி, தனது மகள் வேலை செய்யும் இடத்தில் பாதுகாப்பு இல்லை எனவும், உடல் நிலை சரியில்லாததாலும் தனது மகளை மீட்டுத்தர கோரியும், ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் தாயார் மனு அளித்துள்ளார்.