திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள கந்தன்குடி கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு 35-க்கும் மேற்பட்ட கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டது.
இந்த கான்கிரீட் வீடுகள் அனைத்தும் தற்போது மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. புரெவி புயல் காரணமாக பெய்த கனமழையில் வீடுகளின் மேற்கூரைகள் அனைத்தும் கடும் சேதமடைந்து, கான்கிரீட் மேற்கூரைகளில் விரிசல் விட்டு காரைகளும், கம்பிகளும் வெளியில் தெரிகின்றன. இதனால் எப்போது வேண்டுமானாலும் கட்டடம் இடிந்து விழும் என்பதால், ஒவ்வொரு இரவையும் உயிர் பயத்துடன் கடந்து வருகின்றோம் என அங்கு வசிக்கும் பொதுமக்கள் வேதனையுடன் புலம்புகின்றனர்.