தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கல்லூரி மாணவர்கள் போராட்டம்! - hydro carbon against protest

திருவாரூர்: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மத்திய அரசைக் கண்டித்து அரசு கலை கல்லூரி மாணவர்கள் வகுப்பைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லூரி மாணவர்கள் போராட்டம்.
கல்லூரி மாணவர்கள் போராட்டம்.

By

Published : Jan 23, 2020, 2:57 PM IST

திருவாரூர் திரு.வி.க அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியும், மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த தேவையில்லை என்ற மத்திய அரசின் அறிவிப்பை திரும்பப் பெறக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களைச் செயல்படுத்தினால் டெல்டா மாவட்டங்கள் நீரின்றி வறண்ட பாலைவனமாகும் என்று கூறி விவசாய சங்கங்கள், பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியும் வந்தனர்.

இந்த நிலையில் மத்திய அரசு தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் எடுக்க சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெற தேவையில்லை. என்றும் மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த தேவையில்லை என்றும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பைக் கண்டித்து பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கல்லூரி மாணவர்கள் போராட்டம்

இந்நிலையில், இன்று திருவாரூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் கல்லூரி வாயில் முன்பு, ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதிக்கக் கூடாது என்றும், இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் எனவும் வலியுறுத்தி மத்திய அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: 'குடும்பத்தை மனதில் வைத்து இளைஞர்கள் வேகத்தை தவிர்க்க வேண்டும்'

ABOUT THE AUTHOR

...view details