சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 5 நாள்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமாகி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - நாளை திருவாரூரில் விடுமுறை
schools leave in tiruvarur: கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
schools leave in tiruvarur: அதன்படி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, திருவாரூர் மாவட்டத்திற்கும் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:வளிமண்டல மேலடுக்கு சுழற்சி - டெல்டா மாவட்டங்களில் கனமழை