தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவாரூரில் இடியுடன் கூடிய கனமழை - Thiruvarur district news

திருவாரூர்: நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இடியுடன் கூடிய கனமழை
இடியுடன் கூடிய கனமழை

By

Published : Sep 29, 2020, 8:51 AM IST

வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.

அதன்படி நன்னிலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று (செப்.28) மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் இரவு முழுவதும் மழை பெய்தது.

இடியுடன் கூடிய கனமழை

குறிப்பாக நன்னிலம், ஆண்டிபந்தல், பேரளம் , கொல்லுமாங்குடி, முடிகொண்டான் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

இதனால் சம்பா சாகுபடிக்கு தயாராகி கொண்டிருக்கும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: அரியலூரில் ஆலங்கட்டி மழை

ABOUT THE AUTHOR

...view details