திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே சுமார் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளில் ஈடுபட்டுவருகிறார்கள். நேற்று (ஜூலை 24) பெய்த கனமழையினால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், "ஊரடங்கு நேரத்தில் பல்வேறு இடர்பாடுகளுக்கிடையே கடன்கள், நகைகளை அடமானம் வைத்து குறுவை சாகுபடியில் ஈடுபட்டுவருகிறோம். ஏக்கருக்கு 30ஆயிரம் முதல் 40ஆயிரம் ரூபாய்வரை செலவு செய்து நல்ல விளைச்சல் காணும் என்ற நம்பிக்கையில் இருந்துவந்தோம்.
ஆனால் நேற்று பெய்த கனமழையால் நெற்பயிர்கள் அனைத்தும் வயலில் மடிந்துவிட்டன. இதனால் கூலி ஆள்களும் வேலைக்கு வருவதற்கு தயங்குகின்றனர்.