தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் கோடை மழை... திருவாரூர், நாகை மக்கள் மகிழ்ச்சி! - Thiruvarur rain news

தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்டு வந்த நிலையில், தற்போது கோடை மழை தொடங்கியுள்ளது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

dsds
ds

By

Published : Apr 30, 2020, 1:31 PM IST

தமிழ்நாடு மக்கள் சுட்டெரிக்கும் வெயிலால் வாடிக்கொண்டிருந்த நிலையில், சமீப நாள்களாக பெய்து வரும் கோடை மழை அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில், திருவாரூரில் இன்று காலை முதல் திருவாரூர், நன்னிலம், ஆண்டிபந்தல், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இந்தக் கோடை மழையால் குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளும், பொது மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருவாரூர், நாகை மக்கள் மகிழ்ச்சி

அதே போல், நாகை மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக விட்டுவிட்டு மழை பெய்து வரும் நிலையில், இன்று அதிகாலை முதலே நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, தெற்குப்பொய்கைநல்லூர், கருவேலங்கடை, செருதூர், பிரதாபராமபுரம், திருப்பூண்டி உள்ளிட்ட பல இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தற்போது தாளடி நெல் சாகுபடி பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தங்களுக்கு இந்த மழை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தரப்பில் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:சென்னையில் ஒரே நாளில் 3 பேர் தூக்கு மாட்டி தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details