தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு அறிவிப்பை பொருட்படுத்தாத துணிக் கடைக்குச் சீல்! - govt rules breaking textile shops sealed

திருவாரூர்: விதிமுறைகளைப் பின்பற்றாமல் கடையைத் திறந்துவைத்த பிரபல துணிக் கடைக்கு அலுவலர்கள் சீல்வைத்தனர்.

govt rules breaking textile shops sealed
govt rules breaking textile shops sealed

By

Published : Mar 22, 2020, 9:10 AM IST

மத்திய-மாநில அரசுகள் கரோனா பாதிப்புகளைக் குறைக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளுக்கு அரசு தடைவிதித்துள்ளது.

அதன்படி போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை அனுமதிக்கக் கூடாது, மக்கள் அதிகம் கூடும் பெரும் வணிக நிறுவனங்கள் கடையை மூட வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் பெரும் வணிகர்களை அழைத்து உரிய அறிவுரைகளை வழங்கி அனுப்பியது. அறிவுரையின்படி திருவாரூர் பெரிய வணிக நிறுவனம் தங்களது கடைகளை அடைத்தனர்.

மக்கள் ஊரடங்கு - வைரலாகும் வில்லிசைப்பாடல்!

இச்சூழலில் அரசின் விதிமுறைகளை மீறி கடைகள் திறக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து திருவாரூர் கோட்டாட்சியர் ஜெயப்பிரீத்தா தலைமையில் அலுவலர்கள் கடைவீதிக்குச் சென்று நேற்று ஆய்வுசெய்தார்கள். அப்போது பிரபல துணிக் கடை ஒன்று முன்னெச்சரிக்கை விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் கடையைத் திறந்துவைத்திருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட கடைக்கு அலுவலர்கள் சீல்வைத்தனர். இச்சம்பவம் கடைவீதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக பெரிய வணிக நிறுவனங்களும், கடைகளும் உடனடியாக அடைக்கப்பட்டன.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details