தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமணத்தில் உடன்பாடு இல்லாததால் பெண் தற்கொலை - திருமணத்தில் உடன்பாடு இல்லாததால் பெண் குளத்தில் மூழ்கி இறப்பு

திருவாரூர்: திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் குளத்தில் மூழ்கி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

girl suicide in thiruvarur
girl suicide in thiruvarur

By

Published : Jan 8, 2020, 11:15 AM IST

திருவாரூர் அருகே காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன், இவரது மகள் பிரதீபா (21), நர்சிங் தொடர்பாக படித்துவந்தார். மாற்றுத்திறனாளியான பிரதீபாவுக்கு வீட்டில் திருமண ஏற்பாடு செய்துள்ளனர்.

கடந்த மாதம் 30ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் பிரதீபாவின் படிப்பை வீட்டில் உள்ளவர்கள் பாதியில் நிறுத்திவிட்டனர். இதனால் பிரதீபா மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் திருமணம் தொடர்பாக வீட்டிலிருந்த அனைவரும் வெளியூர் சென்றுவிட்டு திரும்பிவந்த பார்த்தபோது வீட்டிலிருந்த பிரதீபாவை காணவில்லை.

அவரை பல இடங்களில் தேடிப் பார்த்தபோது அருகேயுள்ள குளத்தில் அவரது உடல் மிதந்துகொண்டிருந்தது. தகவலறிந்து வந்த தாலுகா காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

திருமணத்தில் உடன்பாடு இல்லாததால் பெண் குளத்தில் மூழ்கி இறப்பு

இந்நிலையில் தனக்குத் திருமணம் செய்துகொள்ள பிடிக்காததால் தற்கொலை செய்துகொள்வதாக அவர் கடிதம் எழுதிவைத்துவிட்டு இறந்துள்ளதும் தெரியவந்ததது. இதையடுத்து காவல் துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: '14 முறை சிறைக்குச் சென்றுள்ளேன்' - 'சூல்' எழுத்தாளர் சோ.தர்மன்

ABOUT THE AUTHOR

...view details