தமிழ்நாட்டில் தற்போது கோடைக்காலம் தொடங்கி, கடும் வெயிலுடன் சேர்ந்து அனல் காற்று வீசி பொது மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் வெயிலின் தாக்கத்தை குறைக்க தன்னார்வ அமைப்புகள் சாலையோரங்களில் பந்தல்கள் அமைத்து குடிநீர், நீர் மோர் போன்றவற்றை வழங்கி பொது மக்களுக்கு உதவி வருகின்றனர்.
நீர்மோர்-தண்ணீர் பந்தலை தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் துவங்கிவைத்தார். இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ், திருவாரூர் அதிமுக அலுவலகம் எதிரே நீர்மோர் மற்றும் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.
நீர்மோர்-தண்ணீர் பந்தலை தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் துவங்கிவைத்தார் இந்நிகழ்வின்போது நீர்மோர், தர்பூசணி, வெள்ளரிக்காய், இளநீர், உள்ளிட்டவைகளை தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் வழங்கினார். இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: அம்பேத்கரின் சட்டக் கட்டமைப்பை பாஜகவால் அசைக்க முடியவில்லை - மு.க. ஸ்டாலின்