திருவாரூரில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நியாய விலைக் கடைகளில் பொருட்கள் வழங்கும் விழாவை உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர் கூறுகையில், "திருவாரூர் மாவட்டம் முழுவதும் 29,000 அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு முதலமைச்சர் அறிவித்த ஆயிரம் ரூபாய் பணமும், நிவாரண பொருட்களும் இன்று முதல் வழங்கப்படுகிறது.
நிவாரண பொருட்கள் வழங்கும் அமைச்சர் காமராஜ் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் ஒரு மணி நேரம் வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விற்பனை விலையை உயர்த்தி விற்பனை செய்தாலோ அல்லது பதுக்கலில் ஈடுபட்டாலோ அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் அதிக விலை வைத்து அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்த கடைக்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி அவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயும் என மீண்டும் ஒருமுறை எச்சரிக்கின்றோம் என்றார்.
மேலும் வருகின்ற இரண்டு வாரங்களும் கரோனா தடுப்பு நடவடிக்கையை கடுமையாக இருக்கவேண்டும் என்றும் பிரதமரும், முதலமைச்சரும் கேட்டுக் கொண்டுள்ளனர். அதன்படி கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு 144 தடை உத்தரவால் எந்த ஒரு பிரச்னையும் ஏற்படாது எனவும் தெரிவித்தார்.