தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் 18-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
அமமுக பரிசு பெட்டகம்: அதிரடி காட்டிய பறக்கும் படை! - கிப்ட் பாக்ஸ்
திருவாரூர்: குங்கும சிமிழுடன் கூடிய 285 பரிசுப்பெட்டகங்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
திருவாரூரில் காவல்துறை சார்பில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் அனைத்தும் முழு பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே நகருக்குள் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
இந்நிலையில், திருவாரூர் அருகே காவனூரில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாகச் சென்ற அமமுகவினரின் வாகனத்தை அதிகாரிகள் சோதனையிட்டனர். அந்த வாகனத்தில் குங்கும சிமிழுடன் கூடிய 285 பரிசுப் பெட்டகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் அந்த பொருட்களை பறிமுதல் செய்து, வருவாய் கோட்டாச்சியர் முருகதாஸிடம் ஒப்படைத்தனர்.