தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், பிப்ரவரி 26ஆம் தேதிமுதல் தமிழ்நாட்டில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தங்கமணி கட்டடம் அருகே சாலையோரம் இருந்த போக்குவரத்துக் காவல் துறையின் நிழல் கூண்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.