தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’உர விலை ஏற்றத்தால் செய்வதறியாது நிற்கிறோம்’ - விவசாயிகள் வேதனை! - farmers worries on hike on fertilizers prices

திருவாரூர்: கூட்டுறவு சங்கங்கத்தில் சாதாரணமாக யூரியா 270 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது மூட்டை ஒன்று 400 முதல் 410 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. உரங்களின் விலை இப்படி கடுமையாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் பெரும் சோர்வு அடைந்துள்ளனர்.

விவசாயி
விவசாயி

By

Published : Apr 11, 2021, 3:15 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடந்து முடிந்துள்ள நிலையில், மத்திய அரசு முன்னதாக உரங்களின் விலையை உயர்த்தி அறிவித்துள்ளது, விவசாயிகளின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

உரவிலை ஏற்றம்

நடவு செய்யும் விவசாயிகள்

டிஏபி உரம் 50 கிலோ 1,900 ரூபாய்க்கும், 900 ரூபாய்க்கு விற்ற காம்ப்ளக்ஸ் 20:20 உரங்கள் 1,350 ரூபாய்க்கும், 1,175 ரூபாய்க்கு விற்ற 10:26:26 உரம் 1,775 ரூபாய்க்கும், 900 ரூபாய்க்கு விற்ற 15:15:15 உரம் 1,500 ரூபாய்க்கும், 1,200 ரூபாய்க்கு விற்ற 12:32:16 உரம் 1,800 ரூபாய்க்கும் தற்போது விற்பனையாகின்றன. உரங்களின் விலை இப்படி கடுமையாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் பெரும் சோர்வு அடைந்துள்ளனர்.

விவசாயிகள் கவலை

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள விவசாயிகள், ”கூட்டுறவு சங்கங்கத்தில் சாதாரணமாக யூரியா 270 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது மூட்டை ஒன்று 400 முதல் 410 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் டிஏபி மூட்டை ஒன்றின் விலை முன்னதாக 1200 ரூபாயாக இருந்தது. ஆனால், தற்போது மூட்டை ஒன்றுக்கு 700 ரூபாய் கூடுதலாக விலை நிர்ணயம் செய்து, 1,900 ரூபாய் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த விலையேற்றம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

’உர விலை ஏற்றத்தால் செய்வதறியாது நிற்கிறோம்’ - விவசாயிகள் வேதனை!

கோடை, நெல் சாகுபடியில் பிரச்னை

கோடை பருத்தி சாகுபடியிலும், மூன்றாம் போகமான நெல் சாகுபடியிலும் நாங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ள இச்சூழலில், உரம் தெளிக்க வேண்டிய நேரத்தில், மத்திய அரசின் இந்த விலை ஏற்ற அறிவிப்பால் செய்வதறியாது குழப்பத்தில் ஆழ்ந்துள்ளோம்.

எனவே தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, மத்திய அரசு விலை உயர்வை வாபஸ் பெற்று பழைய விலைக்கு உரங்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:உர விலை உயர்வு; மோடி அரசு கடும் விளைவுகளை சந்திக்கும்: தமிழ்நாடு காங்கிரஸ்

ABOUT THE AUTHOR

...view details