திருவாரூர்: முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, கோட்டூர் ஒன்றிய பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்டு மறு சாகுபடி செய்த விளை நிலப்பகுதிகளை தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பிஆர் பாண்டியன் நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் பருவம் மாறி பெய்த பெருமழையால் பல்வேறு இடங்களில் பேரழிவை சந்திக்க வேண்டி வந்தது. பல கிராமங்களில் நடவு மற்றும் நேரடி விதைப்பு செய்து அழிந்தவர்கள் நிவாரணம் கேட்டு வருகின்றனர்.
நீர் தேவை
தமிழ்நாடு முதலமைச்சர் அழிந்துபோன சம்பா, தாளடி பயிர்களை மறு உற்பத்தி செய்வதற்கு இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்ததை நம்பி விவசாயிகள் மறு சாகுபடி பணியை மேற்கொண்டுள்ளனர். அவ்வாறு காலம் கடந்து மறுசாகுபடி மேற்கொண்ட விவசாயிகளுக்கு இளம் பயிரை பாதுகாக்க பிப்ரவரி இறுதிவரை மேட்டூர் நீர் தேவை உள்ளது.
குறிப்பாக திருவாரூர்,நாகப்பட்டினம் மாவட்டங்களில் கடைமடை பகுதிகளில் சுமார் 2 லட்சம் ஏக்கரில் காலங்கடந்து மறு விவசாயப் பணிகள் நடைபெற்றுள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஜனவரி 28 ல் மேட்டூர் அணை மூடுவதை கைவிட்டு பிப்ரவரி 15 வரை திறப்பினை கால நீட்டிப்பு செய்து வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
பின்னடைவு