தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவாரூரில் கனமழையால் நெர்பயிர்கள் சேதம்: விவசாயிகள் வேதனை! - திருவாரூரில் கனமழை

திருவாரூர்: கடந்த இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருவதால், அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் முழுவதும் வயலில் சாய்ந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

திருவாரூரில் கனமழையால் நெர்பயிர்கள் சேதம்  Damage to paddy crops due to heavy rains in Thiruvarur  Farmers suffer due to heavy rains in Thiruvarur  heavy rains in Thiruvarur  திருவாரூரில் கனமழை  கனமழை
Farmers suffer due to heavy rains in Thiruvarur

By

Published : Jan 6, 2021, 2:54 PM IST

தமிழ்நாட்டில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது.

கனமழை

இந்நிலையில், இன்று திருவாரூர் முழுவதும் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், தற்போது திடீரென கடந்த இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது சம்பா சாகுபடி பணியில் ஈடுபட்டு அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் முழுவதும் வயலில் சாய்ந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

திருவாரூரில் கனமழை

இதையும் படிங்க:சென்னையில் அடுத்த ஆறு மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details