மத்திய அரசின் மின்சார சட்டத்திருத்த வரைவு மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, முத்துப்பேட்டை, கோட்டூர், திருவாரூர், நன்னிலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விவசாயிகள் தங்களின் வீடுகள் மற்றும் சிறு இடங்களில் குழுக்களாக பிரிந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மின்சார சட்டத்திருத்த வரைவு மசோதா: விவசாயிகள் போராட்டம்!
திருவாரூர்: மத்திய அரசின் மின்சார சட்டத்திருத்த வரைவு மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் முழுவதும் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு விவசாயத்திற்கு வழங்கக் கூடிய இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் வகையில் மின்சார சட்டத்திருத்த வரைவு மசோதாவை நிறைவேற்றுவது கைவிட வேண்டும், காவிரி மேலாண்மை ஆணையத்தை ஜனசக்தி துறையுடன் இணைக்கும முடிவை கைவிட வேண்டும், மேட்டூர் அணை சரபங்கா திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் வலியுறுத்தினர்.
கரோனா வைரஸ் காரணமாக கும்பலாக ஒன்று கூடுவதை தவிர்த்து இந்த முறையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.