தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'செம... மழை' : திருவாரூரில் பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி! - thiruvarur latest news

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, திருவாரூரில் பெய்த கனமழையால், சம்பா சாகுபடிக்குத் தயாராகி வரும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

By

Published : Aug 22, 2021, 5:13 PM IST

திருவாரூர்: தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக 20 மாவட்டங்களில், அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் இன்று (ஆக.22) காலை முதலே, வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு வந்தது.

எட்டுத்திக்கும் இடிமுழக்கம்

இதனைத் தொடர்ந்து தற்போது மாவட்டம் முழுவதும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக மன்னார்குடி, நன்னிலம், வலங்கைமான், குடவாசல், பேரளம், ஆண்டிபந்தல், அடியக்கமங்கலம் உள்ளிட்டப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

திருவாரூரில் பெய்த கனமழை தொடர்பான காணொலி

திடீர் கன மழையால் சம்பா விதைப்புக்குத் தயாராகி வரும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தபோதும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் இன்று 17 மாவட்டங்களில் கனமழை!

ABOUT THE AUTHOR

...view details