மத்திய அரசு அண்மையில் உயர்த்திய உர விலையைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பல்வேறு விவசாய சங்கங்கத்தினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் வருகின்ற ஏப்ரல் 20ஆம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. இது குறித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநிலத் துணைச் செயலர் பி.எஸ்.மாசிலாமணி கூறியதாவது, “மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மத்திய அரசு கொண்டுவந்த மூன்று சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராடி வரும் நிலையில் தற்போது வரை வேளாண் சட்டங்களை திரும்பப் பெறாமல் மத்திய அரசு விவசாயிகளை ஏமாற்றி வருகிறது.
இச்சூழலில் தற்போது வேளாண் உற்பத்திக்கு அடிப்படையான ரசாயன உரங்களின் விலையையும் 65 விழுக்காடு வரைமத்திய அரசு உயர்த்தியுள்ளது. இந்த உர விலை ஏற்றத்தால் பொட்டாசியம், காம்ப்ளக்ஸ், யூரியா உள்ளிட்ட உரங்களின் விலை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், தற்காலிகமாக இந்த விலை உயர்வை நிறுத்தி வைப்பதாக கூறியும் மத்திய அரசு விவசாயிகளை ஏமாற்றி வருகிறது. சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுற்ற நிலையில் தற்போது விலை உயர்வை 2.5 விழுக்காடு உயர்த்தியது வேதனையாக உள்ளது.
உர விலை உயர்வை கண்டித்து கொந்தளிக்கும் விவசாயிகள் இதனால் இந்த விலை உயர்வை மத்திய அரசுதிரும்பப் பெற வேண்டும். இதனைக் கண்டித்து திருவாரூர் மாவட்டம் முழுவதும் வருகிற ஏப்ரல் 20ஆம் தேதி விவசாய சங்கங்கள் ஒன்றிணைத்து மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுடவுள்ளோம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உர விலை உயர்வு; மோடி அரசு கடும் விளைவுகளை சந்திக்கும்: தமிழ்நாடு காங்கிரஸ்