தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீட் தேர்வு தமிழ்நாட்டிற்கு தேவையில்லை: அமைச்சர் காமராஜ்! - திருவாரூர் மாவட்ட செய்திகள்

திருவாரூர்: இந்தாண்டு நீட் நுழைவுத் தேர்வு தமிழ்நாட்டிற்கு தேவையில்லை என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு தமிழ்நாட்டிற்கு தேவையில்லை
நீட் தேர்வு தமிழ்நாட்டிற்கு தேவையில்லை

By

Published : Aug 27, 2020, 5:01 PM IST

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (ஆக.28) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கரோனா தடுப்பு நடவடிக்கைகள், மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

இதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை இன்று (ஆக.27) உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆய்வு செய்தார்.

நீட் தேர்வு தமிழ்நாட்டிற்கு தேவையில்லை

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, "நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு.

தமிழ்நாட்டிற்கு நீட் நுழைவுத் தேர்வு தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அது தொடர்பான பதில் வந்த பிறகு நீட் தேர்வு விவகாரத்தில் அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். டெல்டா மாவட்டங்களை அச்சுறுத்திக் கொண்டிருந்த ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு விடை கொடுத்தவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலத்தை பலப்படுத்தும் விதமாக வளர்ச்சி பெறும் சில திருத்தங்கள் செய்யப்பட்டு, நேற்றைய தினம் கெஜட்டில் வெளியிடப்பட்டுள்ளது" எனக் கூறினார்.

இதையும் படிங்க: பொது போக்குவரத்து, ஊரடங்கு தளர்வு குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்' - அமைச்சர் காமராஜ்

ABOUT THE AUTHOR

...view details