திருவாரூர் மாவட்டம், மன்னார்க்குடியை அடுத்து பேரையூர் கிராமத்தில் வடவாறு வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் நீர்பாசனத்தை வைத்து சுற்றுவட்டார விவசாயிகள் பயன்பெற்று வந்துள்ளனர். இந்நிலையில் வாய்காலின் இருப்புறத்தையும் சிலர் ஆக்கிரமித்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தனர். இதையறிந்த மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி ராஜா தனியாக வடவாறு வாய்க்காலை ஆய்வு செய்தார்.
விஏஓ-வை வெற்றிலை, பாக்கு வைத்து அழைத்த எம்எல்ஏ! - VAO
திருவாரூர்: மன்னார்குடியில் வாய்க்கால் ஆய்வு குறித்து பார்வையிட அழைத்தும் வராத கிராம நிர்வாக அலுவலரை வெத்தலை, பாக்கு, தாம்பூலம் வைத்து, அத்தொகுதி எம்எல்ஏ அழைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிராம நிர்வாக அலுவலரை வெற்றிலை, பாக்கு வைத்து அழைத்த எம்எல்ஏ
அப்போது பேரையூர் கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியனை வடவாறு வாய்க்காலில் உள்ள பிரச்னைகள் குறித்து ஆலோசனை செய்ய எம்எல்ஏ அழைத்தற்கு அவர் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த அவர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு நேரில் சென்று வெற்றிலை, பாக்கு, தாம்பூலம் வைத்து அழைத்தார். இந்த சம்பவத்தால் அரசு அலுவலகத்தில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.