நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு தொகுதியும் என மொத்தம் 40 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தலும், தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 இடங்களுக்கும் இடைத்தேர்தலும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறுகிறது.
தேர்தல் பரப்புரையை தொடங்கினார் ஸ்டாலின்! - திமுக
சென்னை: திருவாரூர் இடைத்தேர்தல் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரையை தி.மு.க.ஸ்டாலின் தொடங்கினார்.
stalin
இந்நிலையில் இன்று காலை திருவாரூர் இடைத்தேர்தல் சட்டப்பேரவை வேட்பாளர் பூண்டி கலைவாணனுக்கு ஆதரவாக திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள தனது வீட்டிலிருந்து தேர்தல் பரப்புரையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கினார்.