திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே நீடாமங்கலத்திற்குட்பட்டப் பகுதிகளில் கடந்த 2018,2019,2020ஆம் ஆண்டுகளில் வெளிமாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட மது பாட்டில்களை மதுவிலக்கு அமலாக்கத்துறை அலுவலர்கள் கைப்பற்றினர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை நீடாமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், கைப்பற்றப்பட்ட மதுபாட்டில்கள் அனைத்தும் நீதி மன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.
இதையடுத்து, நீதிபதி ரோஸ்லின் உத்தரவின்பேரில், மதுவிலக்கு அமலாக்கத்துறை அலுவலர்கள் நீதிபதி முன்னிலையில், சுமார் 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள 15 ஆயிரம் மதுபாட்டில்களை அழித்தனர்.
மதுபாட்டில்களை அழிக்கும் அமலாக்கத்துறையினர் கரோனா நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்க, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மதுக்கடைகள் மூடப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டன. இதனிடையே, மதுக்கடைகள் திறக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள மதுப்பிரியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:மது போதையில் ரோட்டில் உருண்ட அரசு ஊழியர்!