தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிலிண்டர் விலை உயர்வு: மன்னார்குடியில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்! - women's Association

திருவாரூரில் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து மாதர் சங்கத்தினர் சிலிண்டர் உருளைக்கு மாலை அணிவித்து, ஒப்பாரி வைத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மாதர் சங்கத்தினர் போராட்டம்
சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மாதர் சங்கத்தினர் போராட்டம்

By

Published : Dec 21, 2020, 7:18 PM IST

மத்திய அரசானது மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை நாளுக்கு நாள் உயர்த்தி வருகிறது.

கடந்த சில நாள்களாக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளானர். எனவே பல்வேறு தரப்பினர் தங்களது கண்டனத்தை பதிவு செய்துவருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கோட்டூரில் இந்திய தேசிய மாதர் சம்மேளத்தின் சார்பில் சிலிண்டர் உருளைக்கு மாலை அணிவித்து ஓப்பாரி வைத்து மத்திய மாநில அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பி கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிலிண்டர்க்கு மாலை அணிவித்து, ஒப்பாரி வைத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மாதர் சங்கத்தினர்
இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய பாஜக அரசு உடனடியாக சிலிண்டர் விலையை குறைக்க வில்லையெனில் இந்திய மாதர் சம்மேளத்தின் சார்பில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என மத்திய அரசுக்கு எச்சாிக்கை விடுத்து கோஷங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க:சிலிண்டர் விலை உயர்வு: ஒப்பாரி வைத்து மாதர் சங்கத்தினர் போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details