புரெவி புயல் தாக்கத்தினால் தொடர்ந்து பெய்து வரும் கன மழைக் காரணமாக திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள பொியகுருவாடி, காாியமங்கலம், குலமாணிக்கம், விக்கிரபாண்டியம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் சுமார் ஐம்பதாயிரம் ஏக்கருக்கு மேலாக தாளடி, சம்பா சாகுபடி ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் கடந்த 6 நாள்களுக்கு மேலாக பெய்து வந்த கன மழையினால் 6 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. வயல்களிலிருந்து தண்ணீரை வெளியேற்ற முடியாமல் விவசாயிகள் தவித்துவருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், “கடந்த ஆண்டு கோட்டூர் பகுதிகள் முழுவதும் ஆனைக்கொம்பன் நோயால் சம்பா பயிர்கள் முழுவதும் பாதிக்கபட்டு விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து வந்த நிலையில், இந்தாண்டு புரெவி புயலால் பெய்த கன மழையால் பயிர்கள் முழுவதும் நீரில் முழ்கி சேதமைடைந்துள்ளன.