திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, கோட்டூர், முத்துப்பேட்டை ஆகிய ஐந்து ஒன்றியங்களுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. திருத்துறைப்பூண்டியில் 143 வாக்குச்சாவடிகளிலும், முத்துப்பேட்டையில் 131 வாக்குச்சாவடிகளிலும் பொதுமக்கள் தங்கள் வாக்குகளை செலுத்திவருகின்றனர். இதில் திருத்துறைப்பூண்டி அருகே வேலூர் கிராமத்திலுள்ள அரசு தொடக்கப் பள்ளியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தனது குடும்பத்துடன் சென்று வாக்கு செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ”தமிழ்நாடு அரசு பொருத்தமற்ற காரணங்களைக் கூறி தமிழ்நாட்டில் மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தாமல் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தது. தற்போது உச்ச நீதிமன்றத்தின் நிர்பந்தத்தால் உள்ளாட்சித் தேர்தலை அரசு இரண்டு கட்டங்களாக நடத்தி வருகிறது.