திருவாரூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 28ஆம் தேதி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகிறார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்பதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அரசு அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இக்கூட்டத்திற்கு செய்தி சேகரிக்க வரும் பத்திரிகையாளர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்க வேண்டும் என அரசு தரப்பில் கூறப்பட்டது.