தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

யூரியா தட்டுப்பாடு - பருத்திப் பயிர் பாதிப்பு! - யூரியா தட்டுப்பாடு

திருவாரூர்: கரோனா வைரஸ் தொற்று தாக்கத்தின் காரணமாக, யூரியா தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன்காரணமாக, பருத்தி பயிர்கள் பயிரிட்ட விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

யூரியா தட்டுப்பாடு: பருத்தி பயிர் பாதிப்பு!
யூரியா தட்டுப்பாடு: பருத்தி பயிர் பாதிப்பு!

By

Published : Apr 5, 2020, 3:22 PM IST

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், பருத்தி சாகுபடியில் விவசாயிகள் மிக மும்முரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

பருத்தியானது 45 நாட்கள் முடிந்து, தற்போது உரம் போட வேண்டிய நிலையில் காணப்படுகின்றன. வளர்ந்து நிற்கும் பருத்தி பயிர்களுக்கு உரம் போடுவதற்கு யூரியா மூட்டைகள் கிடைக்காததால், பருத்தி பயிரிட்ட விவசாயிகள் கடும் வேதனையில் தவித்துவருகின்றனர்.

கரோனா வைரஸ் தொற்று தாக்கத்தின் காரணமாக, பொது போக்குவரத்து சரிவர இல்லாததாலும், திருவாரூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் யூரியா முட்டைகள் கிடைக்காததாலும், பருத்தி பயிர்கள் தற்போது வாடும் தருவாயில் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

யூரியா தட்டுப்பாடு: பருத்தி பயிர் பாதிப்பு!

பருத்திச் செடிகளுக்கு உரம் போட வேண்டிய நேரத்தில், யூரியாவுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. காலம் தாழ்த்திச் செடிகளுக்கு உரம் போட்டாலும் பருத்தி செடிகளில் சரிவர பூக்கள் வராமலும், காய்கள் காய்க்காமலும் போகும் சூழ்நிலை உருவாகும்.

இதன் காரணமாக, பெருமளவில் இழப்பைச் சந்திக்கும் நிலை ஏற்படும் என்று பருத்தி விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர். யூரியா தட்டுப்பாட்டை நீக்கி, தமிழ்நாடு அரசு அனைத்து கடைகளிலும் யூரியா தடையின்றி கிடைப்பதற்கான வழிகளை ஏற்படுத்தி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க...தமிழ்நாட்டில் கரோனாவுக்கு மேலும் இருவர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details