தமிழ்நாட்டின் இளம் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகிறது.
கைப்பந்து போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்கும் மாணவிகள் அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இந்த ஆண்டின் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
ஆர்வமாக பங்கேற்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகள் இப்போட்டிகளை மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள் தொடங்கிவைத்தார். தடகளம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், கூடைப்பந்து, கைப்பந்து, ஹாக்கி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடக்கவுள்ளன. இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டு விளையாடினார்கள். இப்போட்டியில் வெற்றிபெறும் வீரர்கள் மாநிலளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதிபெறுவார்கள்.
இதையும் படிங்க:ஈழத்தமிழர்களுக்கான ஐவர் கால்பந்தாட்ட போட்டி: அடியனூத்து முகாம் அணி சாம்பியன்!