திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடி மற்றும் நன்னிலம் பகுதியில் அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் சரவணனுக்கு வாக்கு சேகரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி, ‘திமுககாரர்கள் ஒழுங்காக இருந்தால் பெண்கள் பத்திரமாக இருப்பார்கள் என்றும், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசுவதற்கு தகுதி கிடையாது’ என்றும் குற்றஞ்சாட்டினார்.