திருவாரூர்: நன்னிலம் அருகேவுள்ள நீலக்குடியில் செயல்பட்டுவரும் மத்திய பல்கலைக்கழகத்தில் இணையவழி மூலம் 6ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கிருஷ்ணன் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'அக்டோபர் 20ஆம் தேதி முதல் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது.
இந்த மத்தியப் பல்கலைக்கழகத்தில் இயங்கும் இளங்கலை, முதுகலை துறைகளிலுள்ள பாடத்திட்டங்கள் அனைத்தையும் தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராமப்புற மாணவர்களுக்கு எடுத்துச்செல்ல வேண்டும்.
இந்த பல்கலைக்கழகத்தில் 2ஆயிரத்து 500 மாணவர்களில் அதிகபட்சமாக தமிழ்நாடு அல்லாத மாணவர்கள் தான் பயின்று வருகிறார்கள்.
தமிழ்நாட்டு மாணவர்கள் குறைந்த அளவிலேயே பயின்று வருவதால், இந்த மத்தியப் பல்கலைக்கழகம் குறித்த செய்திகளை வெளியில் தெரியப்படுத்த வேண்டும்.