குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் என பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராகப் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இச்சட்டம் நாடு முழுவதும் நடைமுறைக்குக் கொண்டுவந்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
இச்சட்டத்தால் சிறுபான்மையினர் பாதிக்கப்படுவதாகக் கூறி குடியுரிமை சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி திருவாரூர் அருகேவுள்ள கொரடாச்சேரியில் அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தேசியக்கொடியுடன் பேரணியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.