தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’எப்போ ப்ரெண்ட்ஸ் கூட விளையாடுவோமோ தெரியல...லீவ் ரொம்ப போர் அடிக்குது’ - corona updates in tamil

திருவாரூர்: ஊரடங்கால் நண்பர்களுடன் விளையாட வெளியே செல்ல முடியாமல் குழந்தைகள் விடுமுறையை வெறுமையாக கழித்து வருகின்றனர்.

சிறுமி
சிறுமி

By

Published : May 14, 2020, 12:09 AM IST

கோடை விடுமுறைக்காக குழந்தைகள் காத்திருந்த காலம் மலையேறி, எப்போது லீவ் முடியும் என அவர்களே ஏங்கி தவிக்கும் நிலையை ஏற்படுத்திவிட்டது, ஊரடங்கு. நண்பர்களுடன் விளையாடும் பொன்னான தருணங்களை இழந்து, தனிமையில் குழந்தைகள் பொழுதைபோக்குகின்றனர்.

கரோனா அச்சத்தினால், திருவாரூர் மாவட்டம் திருக்கொட்டாரத்தில் பாதுகாப்பு நடவடிக்கையாக, தங்கள் ஊரில் முள்வேலி அமைத்து போக்குவரத்தை அவ்வூர் மக்களே தடைசெய்தனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் குழந்தைகளும் கோடையில் உல்லாசமாகத் திரியும் தங்கள் பால்யத்தை இழந்து வருகின்றனர்.

சிறுமியின் ஊரடங்கு அனுபவம்

தனிமையில் மனரீதியான சிக்கல்களையும் சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது குறித்து அப்பகுதி குழந்தை தெரிவிக்கும்போது, என் ப்ரெண்ட்ஸ் யாரையும் பார்க்க முடியவில்லை. தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் பிஸ்கட், மிட்டாய், பால், டீ, போன்றவை எங்களுக்கு கிடைத்தது.

ஆனால், தற்போது அதைப் பார்க்கவே முடியவில்லை. விளையாட சென்றாலும், எங்கள் பெற்றோர் கரோனா வந்துவிடும் என்ற பயத்தில் வீட்டிற்கு அழைத்து வந்துவிடுகிறார்கள். எப்போது எங்கள் நண்பர்களை மீண்டும் பார்ப்போம் என ஆவலாக உள்ளது” என்றார்.


இதையும் படிங்க: வித்தியாசமான முறையில் கரோனா விழிப்புணர்வு - 'சபாஷ் சண்டைக் கலைஞர்களே!'

ABOUT THE AUTHOR

...view details