திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் பின்பக்கத்தில் உள்ள ஆனந்த விநாயகர் குளத்தில் இரண்டு சிறுவர்கள் பொம்மை மிதக்கிறது என நினைத்து அதன்மீது கல்வீசி விளையாடிக்கொண்டிருந்தாகக் கூறப்படுகிறது.
அங்கிருந்தவர்கள் அதைப் பார்த்து, குழந்தை என்பதைக் கண்டறிந்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், அழுகிய நிலையில் இருந்த பச்சிளம் ஆண் சிசுவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.