தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவசாய நிலத்தில் கலக்கும் ரசாயண கழிவு நீர் - விவசாயிகள் ஆர்ப்பாட்டம் - ஓஎன்ஜிசி ரசாயண கழிவு நீர்

கோட்டூர் அருகே ஓஎன்ஜிசியின் ரசாயண கழிவு நீர் வெளியேறியதால் பல ஏக்கர் விளைநிலங்களில் வரும் 10 ஆண்டுகளுக்கு சாகுபடி செய்ய முடியாத அவல நிலை ஏற்ப்பட்டுள்ளதாக கூறி அதிகாரிகளிடம் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விவசாய நிலத்தில் கலக்கும் ரசாயண கழிவு நீர்
விவசாய நிலத்தில் கலக்கும் ரசாயண கழிவு நீர்

By

Published : Mar 11, 2022, 9:01 AM IST

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பல ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களில் ஓஎன்ஜிசி நிர்வாகத்தின் மூலம் 70க்கும் மேற்பட்ட இடங்களில் கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு வருகிறது.

பாரதிமூலங்குடி, ஏக்கர் வெள்ளக்குடி, அடியக்கமங்கலம், கருப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கச்சா எண்ணெய் கொண்டுசெல்லும் குழாயில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டு விளைநிலங்களில் கச்சா எண்ணெய் பரவி விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று (மார்ச் 10) மேலபனையூர் ஊராட்சி கமலாபுரம் கிராமத்தில் ஓஎன்ஜிசி நிர்வாகம் கச்சா எண்ணெய் எடுத்துவரும் பகுதியில் ரசாயண கழிவுகளை சேமித்து வைத்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு பெய்த மழையின் காரணமாக ரசாயண கழிவுகள் சேமித்துவைத்துள்ள குட்டைபோன்ற பகுதி நிரம்பி அக்கழிவுகள் அருகில் இருந்த விவசாய கூலி தொழிலாளியான சுமித்ரா சேகர் எனபவருக்குச் சொந்தமான 3 ஏக்கர் விளைநிலத்தில் பரவியது.

விவசாய நிலத்தில் கலக்கும் ரசாயண கழிவு நீர்

இதனால் நிலத்தின் மண்வளம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கழிவுநீரை அகற்றினாலும் வரும் சாகுபடி செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் மனவேதனை தெரிவித்தனர். ஆகையால் ஒன்றிய, மாநில அரசுகள் இது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு உரிய இழப்பீடு வழங்குவதோடு, ஓஎன்ஜிசி ரசாயண கழிவு பரவிய நிலத்திலுள்ள மண்ணை முற்றாக மாற்றி தரவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இத்தகைய கழிவுநீரால் நிலத்தடி நீர் மட்டம் மாசு ஏற்பட்டு வருவதோடு, பொதுமக்களக்கு இப்பகுதி மக்கள் நோய்கள் பரவும் அபாயம் ஏற்படும் அபாயமும் எழுந்துள்ளது. குறிப்பாக குழந்தைகளுக்கு கண்களில் பலவித நோய்கள் தாக்கும் அபாயமும் எழுந்துள்ளதாக கிராம மக்கள் விவசாயிகள் ஒஎன்ஜிசி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஓஎன்ஜிசி நிர்வாகத்தின் இத்தகைய மக்கள் விரோத போக்கை கண்டித்தும், பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் வாழும் பொதுமக்களின் நலன்காக்க வலியுறுத்தியும் ஓஎன்ஜிசி கச்சா எண்ணெய் எடுக்கும் பகுதியினை மூட வலியுறுத்தி முற்றுகை மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் கிராமமக்கள் எச்சரித்தனர்.

இதையும் படிங்க:'மாநில அரசின் அதிகாரத்தை அணைகள் பாதுகாப்பு சட்டம் பறிக்காது' - மத்திய நீர்வளத்துறை துணை ஆணையர்

ABOUT THE AUTHOR

...view details