தஞ்சாவூர் மாவட்டத்தில் 'நம்ம தஞ்சாவூர்' அமைப்பு ஒன்று இயங்கிவருகிறது. அதில் காவிரிக் கரையோரங்களில் மரம் நடுதல், பறவைகள் காத்தல், ஆதரவற்ற விளையாட்டு வீரர்கள், குழந்தைகளுக்கு நிதி திரட்டுவது உள்ளிட்ட சமூகம் சார்ந்த பணிகள் செய்யப்பட்டுவருகின்றன.
அதன்படி, அந்த அமைப்பு இந்தாண்டு கோடைகாலத்தின் விளைவாக ஏரி குளங்கள் வற்றிவிடுவதால் பறவையினங்கள் நீரின்றி தவிக்கும் சூழல் ஏற்படும் என்பதால் அதனைத் தடுக்கும்விதமாகப் பறவைகளுக்கு உணவு, நீர் அளிப்பதற்கு ஊக்குவிக்கும் வகையில் வீட்டு மாடியிலோ, தோட்டத்திலோ, ஏதேனும் இடத்திலோ நீர்த்தொட்டி அமைத்து அதைச் சிறப்பாகப் பராமரிக்கும் 30 பேருக்கு 'பறவை மனிதர்' விருது வழங்கப்படும் என அறிவித்துள்ளது.