தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 28, 2019, 5:11 PM IST

ETV Bharat / state

'நம்பிக்கையில்லா தீர்மானத்தில் குறுக்கு வழியை கையாளக்கூடாது' - பாலகிருஷ்ணன்

திருவாரூர்: சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அதிமுக அரசு குறுக்கு வழியை கையாளக் கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பாலகிருஷ்ணன்

திருவாரூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சட்டப்பேரவையில் நடைபெற இருக்கும் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அதிமுக அரசு சபாநாயகரை காப்பாற்றும் முயற்சியில் குறுக்கு வழியை கையாளக் கூடாது, நேர்மையான முறையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும், ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக மக்கள் போராடி வரும் நிலையில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் போராடியவர்கள் மீது வழக்கு தொடுப்பது போன்ற செயல்களில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. மேலும் எதிர்க்கட்சிகள் பிற கட்சிகள் இதற்காக குரல் கொடுத்து போராட்டம் அறிவித்தால் போராட்டத்திற்கு அனுமதி இல்லை என்று சொல்லியே இந்த ஆட்சியை நடத்திவிடலாம் என்று அதிமுக அரசு நினைத்தால் அது பகல் கனவாக தான் முடியும் என தெரிவித்தார்.

பின்னர் புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்டால் ஒட்டுமொத்த கல்வி மதம் சார்ந்த கல்வியாக மாறிவிடும் என்று கூறிய அவர், கல்வியை காவி மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இச்செயலை வன்மையாக கண்டிப்பதோடு இதை எதிர்த்து கடுமையான போராட்டத்தை நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.

சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

ABOUT THE AUTHOR

...view details