தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குளத்தை தூர்வார முயன்ற திமுகவினருக்கும் நாதக-வினருக்கும் இடையே வாக்குவாதம்! - நாம் தமிழர்

நன்னிலம் அருகே குளத்தை தூர்வார முயன்றதில் திமுக கட்சியினருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

குளத்தை தூர்வார முயன்ற திமுகவினருக்கும் நாதகவினருக்கும் இடையே வாக்குவாதம்
குளத்தை தூர்வார முயன்ற திமுகவினருக்கும் நாதகவினருக்கும் இடையே வாக்குவாதம்

By

Published : Jul 17, 2022, 10:07 PM IST

திருவாரூர்:நன்னிலம் வட்டத்திற்கு உட்பட்ட வேலங்குடி ஊராட்சிக்குச் சொந்தமான பஞ்சாயத்து குளம் சுமார் 23-லட்சம் மதிப்பீட்டில் டெண்டர் எடுக்கப்பட்டு தூர்வாரும் பணியினை திமுகவினர் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியினர் குளத்தை முறையாக அளந்து வெட்டவில்லை எனக் கூறி முறையாக சர்வேயர் வைத்து அளந்து வெட்ட வேண்டும் என்றும், ஊழல் செய்வதற்காக தூர்வாரும் பணியினை தொடங்கியதாகக் கூறி தொடர்ந்து திமுகவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

குளத்தை தூர்வார முயன்ற திமுகவினருக்கும் நாதகவினருக்கும் இடையே வாக்குவாதம்

மேலும், நாம் தமிழர் கட்சியினர் ஜேசிபி இயந்திரத்தின் மீது ஏறி நின்று தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் திமுக தொண்டர்கள் குவிந்தனர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: தந்தைக்குப் புற்றுநோய் சிகிச்சை அளிக்க 'நீட்' தேர்வு எழுதும் மகள்!

ABOUT THE AUTHOR

...view details