திருவாரூரில் இருந்து திருப்பூர், கோவையில் உள்ள தனியார் நூற்பாலைகள் மற்றும் பின்னலாடை நிறுவனங்களுக்கு இரண்டு சிறுமிகள் விற்கப்பட இருப்பதாகவும், அவர்கள் குழந்தை தொழிலாளர்களாக பணியில் அமர்த்தப்பட இருப்பதாகவும் புகார் எழுந்தது.
இதனையடுத்து திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளாக உள்ள புளியம்பட்டி, புன்செய் புளியம்பட்டி மற்றும் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த பொங்கலூர் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்திருக்கும் தனியார் நூற்பாலைகள் மற்றும் பின்னலாடை நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர் தடுப்பு பிரிவினர், காவல் துறையினர் ஆகியோர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.