திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வடகிழக்கு பருவ மழை பாதுகாப்பு முன் ஏற்பாடுகள் குறித்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில், அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மத்தியக் குழு ஆய்வு
இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.
நெல் கொள்முதல் நிலையம் பற்றி புகார்கள் வந்தால் 22 விழுக்காடு ஈரப்பதம் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை , மத்தியக் குழு ஆய்வு செய்து சென்றுள்ளது. விரைவில் அது குறித்து நல்ல முடிவு வெளியாகும்.
ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை கொடுப்பதற்காக அரிசி கோதுமை உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தேவையான அளவு இருப்பில் உள்ளது. நடமாடும் நேரடி கொள்முதல் நிலையங்கள் குறித்து ஏதேனும் புகார்கள் வந்தால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி கூறினார்.
இதையும் படிங்க:"வேளாளர்" ஆய்வுப் புத்தக வெளியீட்டு விழாவிற்கு அனுமதி கோரிய வழக்கு - கரூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் பதிலளிக்க ஆணை