திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த சங்கேந்திசம்பா கோட்டகம் பகுதியைச் சேர்ந்தவர்கள் விவேகானந்தம் - லிசா(26) தம்பதி. நேற்று இவர்களது வீட்டின் பின்புறம் உள்ள மின் மோட்டாரை லிசாவின் மாமனார் அசோகன் சரிசெய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் அசோகன் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
அவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த லிசா மாமனார் கீழே விழுந்து கிடப்பதைப் பார்த்து அவரைக் காப்பாற்ற முயற்சி செய்தபோது, அவரையும் மின்சாரம் தாக்கியதில் லிசா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.