தமிழ்நாட்டின் மாநில மரமான பனைமரம் புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம் ஆகும். பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை. இயற்கையாக தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. எவ்வளவு வெப்பத்தையும் தாங்கக்கூடிய இவை வளர்ச்சியடைய, சுமார் 15 ஆண்டுகள் ஆகும் எனக் கூறப்படுகிறது. கிளைகளே இல்லாத பனைமரமானது ஆப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்டதாகும்.
ஆப்பிரிக்காவிலிருந்து மனித இனம் எங்கெங்கு இடம்பெயர்ந்ததோ அந்த இடங்களில் எல்லாம் பனை விதைகளை எடுத்துச் சென்றனர் என்று சொல்லப்படுகிறது. ஆசிய நாடுகளான இந்தியா, இலங்கை, மலேசியா, இந்தோனேசியா, மியான்மர், தாய்லாந்து, வியட்நாம், சீனா போன்ற நாடுகளில் பனைகள் அதிகமாகக் காணப்படுகின்றன.
கதர் மற்றும் சித்தூர் தொழில் குழுமம் எடுத்தக் கணக்கெடுப்பின்படி 10.2 கோடி பனை மரங்கள் உள்ள இந்தியாவில், 5 கோடி பனைகள் தமிழ் நாட்டில் மட்டுமே இருக்கின்றன. நெல்லை, தூத்துக்குடி, சென்னை, செங்கல்பட்டு, சிவகங்கை போன்ற மாவட்டங்களில் அதிகம் காணப்படும் பனைமரங்கள் விவசாயம், கைத்தறிக்கு அடுத்தபடியாக அதிகளவு வேலைவாய்ப்பினைக் கொண்டதாக விளங்குகிறது.
பனைத் தொழிலாளர்கள் 80 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் வறுமைகோட்டிற்கு கீழ் தான் வாழ்கின்றனர் பனைமரம் பதநீர், கருப்பட்டி, பனங்கற்கண்டு, பனமிட்டாய், பனங்கூழ் எனப் பல்வேறு பொருள்களாக வடிவம் பெறுகிறது. மரம் ஏறுதல், பூப்பறித்தல், சாறு சேகரித்தல் என பனைத் தொழிலாளர்கள் 80 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் வறுமைக்கோட்டிற்குகீழ் தான் வாழ்கின்றனர். அவற்றில் 67.85 விழுக்காடு குடும்பங்களுக்கு சொந்த மரங்கள் கிடையாது. மிகக் குறைந்த வருமானத்தை கொடுக்கும் தொழிலாக இருப்பதால் தொழிலாளர்கள் மெள்ள மெள்ள வெளியேறி பனைத்தொழில் நலிந்துவருகிறது.
பாரம்பரியத் தொழிலை விட்டு விட்டு கூலி வேலைகளுக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு பனைப் பொருள்கள் ஏற்றுமதி மூலம் இந்தியாவிற்கு ஆண்டுதோறும் 200 கோடி ரூபாய்க்கும் மேல் அந்நியச் செலாவணி கிடைக்கிறது. ஆனால், செங்கல் சூளைகளுக்காகப் பனைமரங்கள் அதிகம் வெட்டப்பட்டு அழிக்கப்பட்டுவருவதால் பனையேறும் தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி, பாரம்பரியத் தொழிலை விட்டுவிட்டு கூலி வேலைகளுக்குச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
பனை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி பனைத் தொழிலாளர்களையும் பனை மரங்களையும் அரசு காக்க வேண்டும் என்பதே பனை ஏறும் தொழிலாளர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
இதையும் படிங்க: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானைகளுக்கு மிஸ்ஸாகும் ஃபுட்
!