திருத்துறைப்பூண்டிநகரட்சி சுகாதார ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர் வெங்கடாசலம் (50). இவர், திருத்துறைப்பூண்டி ஆஸ்பத்திரி தெருவில் வசித்துவருகிறார். நேற்று மதியம் (மே.10) 2 மணிக்கு பணி முடித்து, வீட்டிற்குத் தனது இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, ராமர் மடத் தெருவைச் சேர்ந்த பாமக நகர செயலாளர் கவிபிரியன் என்பவர் வெங்கடாசலத்தை விரட்டி வந்து, கத்தியால் கையில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
காயமடைந்த வெங்கடாசலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வெங்கடாசலம் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கவிபிரியனைத் தேடிவருகின்றனர்.
சுகாதாரத் துறை அலுவலரை கத்தியால் வெட்டிய பாமக பிரமுகருக்கு போலீஸ் வலை! - திருவாரூரில் சுகாதாரத் துறை அலுவலரை கத்தியால் வெட்டிய பாமக பிரமுகருக்கு போலீஸ் வலை
திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே இருச்சக்கர வாகனத்தில் சென்ற சுகாதார ஆய்வாளரை விரட்டி, கத்தியால் கையில் வெட்டிய பாமக பிரமுகரை காவல் துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.
காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஊரடங்கின் காரணமாக பழைய பேருந்து நிலையத்தில் இயங்கிவந்த, பாமக நகர செயலாளர் கவிபிரியனின் மீன் கடை இடம் மாற்றம் செய்யப்பட்டது. இந்த மாற்றத்திற்கு வெங்கடாசலம் தான் காரணம் என, எண்ணிய கவிபிரியன் இந்தச் கொடூர செயலை செய்திருக்கிறார் எனத் தெரியவந்தது.
இந்த சம்பவத்தைக் கண்டித்து, இன்று காலை (மே.11) திருத்துறைப்பூண்டி நகராட்சி முழுவதும் தூய்மைப் பணியாளர்கள், யாரும் பணிக்குச் செல்லாமல் பாமக பிரமுகர் கவிபிரியனை கைது செய்ய வலியுறுத்தி, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஊரடங்கு உத்தரவு நேரத்தில், சுகாதாரத் துறை பணியாளர்கள், மருத்துவ அலுவலர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ’மது குடிக்காதீங்க’- அறிவுரை வழங்கியவருக்கு வெட்டு: அதிரவைக்கும் சிசிடிவி காட்சி
TAGGED:
Thiruvarur district news