திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டை சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த நான்கு சக்கர வாகனத்தை வழிமறித்து சோதனை செய்தனர். அதில், 18 கிலோ தங்கம் இருப்பது கண்டறியப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 6.5 கோடி ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
முத்துப்பேட்டையில் 18 கிலோ தங்கம் பறிமுதல் - 18 kg gold seized at tiurvarur checkpost
திருவாரூர்: முத்துப்பேட்டை சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகனச் சோதனையில், 18 கிலோ தங்கத்தைப் பறிமுதல் செய்தனர்.
திருவாரூர்
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி, முத்துப்பேட்டை காவல் ஆய்வாளர் செந்தூரபாண்டியன், தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகளை திருத்துறைப்பூண்டி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க:இறந்தவருக்குப் பதவி உயர்வா..! - அதிர்ச்சியளித்த பிகார் அரசு