திருவாரூர்,மாவட்டம் குடவாசல் திருப்பாம்புரம் கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி மாத திருவிழா 4 நாட்களுக்கு நடைபெறும். இந்நிலையில் அங்கு அன்னதானம் வழங்கிய உணவை சிலர் அடுத்த நாள் இருப்பு வைத்து சாப்பிட்டுள்ளனர். இதனால் இன்று அதிகாலை முதலே 5 சிறுவர்கள் உட்பட 13 பேருக்கு வாந்தி, பேதி, ஏற்பட்டுள்ளது.
நன்னிலம் அருகே கோவில் பிரசாதம் சாப்பிட்ட 13 பேருக்கு வாந்தி மயக்கம்! - கோவில் பிரசாதம் சாப்பிட்ட 13 பேருக்கு வாந்தி மயக்கம்
நன்னிலம் அருகே மாரியம்மன் கோவில் திருவிழாவில் பிரசாதம் சாப்பிட்ட 13 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.இதனையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நன்னிலம் அருகே கோவில் பிரசாதம் சாப்பிட்ட 13 பேருக்கு வாந்தி மயக்கம்!
இதனையடுத்து அவர்கள் நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் திருப்பாம்புரத்தில் மருத்துவ முகாம் அமைத்து அனைவரையும் பரிசோதனை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க:சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ரூ.1000த்திற்கு முழு உடற் பரிசோதனை!